श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
श्रीदशावतारस्तोत्रम् - Dasavathara Stothram - ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்
विद्योदन्वति वेङ्कटेश्वरकवौ जातं जगन्मङ्गळं
देवेशस्य दशावतार विषयं स्तोत्रं विवक्षेत यः ।
वक्त्रे तस्य सरस्वती बहु मुखी भक्तिः परा मानसे
शुद्धिः कापि तनौ दिशासु दशसु ख्यातिः शुभा जृम्भते ॥ 13 ॥
पदच्छेदः
विद्या उदन्वति वेङ्कटेश्वरकवौ जातं जगन्मङ्गळं
देवेशस्य दशावतार विषयं स्तोत्रं विवक्षेत यः ।
वक्त्रे तस्य सरस्वती बहु मुखी भक्तिः परा मानसे
शुद्धिः का अपि तनौ दिशासु दशसु ख्यातिः शुभा जृम्भते ॥ 13 ॥
विद्या उदन्वति - கலைகள் உறையும் கடலான
वेङ्कटेश्वरकवौ - ஸ்ரீவேங்கடேசனென்னும் கவியிடத்தில்
जातं - தோன்றியதாய்
जगन्मङ्गळं - உலகுக்கு நன்மை பயப்பதாய்
देवेशस्य - தேவாதிதேவனான திருவரங்கனுடைய
दशावतार विषयं - பத்து அவதாரங்களைப் பற்றியதாயுள்ள
स्तोत्रं - இந்த ஸ்தோத்திரத்தை
यः - எவன் சொல்ல விரும்புகிறானோ,
विवक्षेत - அவனுடைய
तस्य वक्त्रे - வாயில்
सरस्वती - ஸரஸ்வதி தேவி
बहु मुखी - பலவகையாக
जृम्भते - ஓங்கி நிற்பாள்
मानसे - மனத்தில்
परा भक्तिः - மிகுதியான பக்தி (வளரும்)
तनौ - சரீரத்தில்
का अपि - அற்புதமான
शुद्धिः - தூய்மை ( வளரும்)
दशसु - பத்து
दिशासु - திசைகளிலும்
शुभा - சீரிய
ख्यातिः - புகழ் (வளரும்)
பலன் கூறுதல்
பெருமானுடைய பத்து அவதாரங்களின் பெருமைகளைப் பற்றியது இந்தத் தசாவதார ஸ்தோத்ரம். இது கலைக் கடலாய் விளங்கும் ஸ்ரீவேங்கடேச கவியின் வாயிலாகத் திருவரங்கனது ஸங்கல்பத்தாலே தானே தோன்றியதாகும். இது அநுஸந்திப்பவர்க்கு ஸகல மங்களங்களையும் அளிக்கவல்லது. இந்த ஸ்தோத்ரத்தை அநுஸந்திக்க வேண்டுமென்று ஒருவன் விருப்பம் கொண்டால்கூட அவன் வாக்கில் ஸரஸ்வதி அமர்ந்து பற்பல அழகிய கவிகளைப் பாடவும் சிறந்த சொற்பொழிவாற்றவும் செய்வாள். உள்ளத்தில் மிகுத்த பக்தி வளரும். சரீரத்திலும் அபூர்வமான தூய்மை பெருகும். இப்படி மனம் வாக்கு காயம் என்னும் முக்கருவிகளும் சிறப்புப் பெறுவது மட்டுமா? புகழ் பத்து திசைகளிலும் மிக மிகப் பரவும்.
ஸ்ரீதசாவதார ஸ்தோத்ரம் முற்றும்
The Fruits of Chanting the Dashavatara Stotram
This Dashavatara Stotram speaks about the greatness of the Lord’s ten avataras. It appeared by the divine will of Lord Ranganatha through the mouth of Sri Venkatesa Kavi (Swami Desika), who is like an ocean of arts and wisdom. This stotram has the power to grant all auspicious blessings to those who recite and meditate on it. Even if a person simply develops the wish to chant it, Goddess Saraswati will sit on his tongue and bless him to compose beautiful poetry and deliver excellent speeches. Deep devotion will grow in his heart. His body too will gain a rare kind of purity. Thus, the three instruments—mind, speech, and body—will all become refined and blessed. Not only that, his good fame will spread far and wide in all ten directions.
Thus concludes the Sri Dashavatara Stotram.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
SarvamSriKrishnarpanam