Friday, February 20, 2026

Dashavathara Stotram - 04 – வராஹாவதார வர்ணநம் - Varahavataram

    श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीदशावतारस्तोत्रम् - Dasavathara Stothram - ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்

04 – வராஹாவதார வர்ணநம் - Varahavataram

गोपायेदनिशं जगन्ति कुहना पोत्री पवित्रीकृत
ब्रह्माण्डः प्रळयोर्मि घोष गुरुभिर्घोणा रवैर्घुर्घुरैः । 
यद्दं ष्ट्राङ्कुर कोटि गाढ घटना निष्कम्प नित्य स्थितिः 
ब्रह्म स्तम्बमसौदसौ भगवती मुस्तेव विश्वंभरा ॥ 4 ॥

पदच्छेदः
गोपायेत् अनिशं जगन्ति कुहना पोत्री पवित्रीकृत
ब्रह्माण्डः प्रळय ऊर्मि घोष गुरुभि:  घोणा रवै: घुर्घुरैः । 
यत्  दंष्ट्रा अङ्कुर कोटि गाढ घटना निष्कम्प नित्य स्थितिः 
ब्रह्म स्तम्बम् असौत्  असौ भगवती मुस्ता इव  विश्वंभरा ॥ 4 ॥

प्रळय ऊर्मि  -  பிரளய காலத்துக் கடலலைகளின் 
घोष गुरुभि:  — ஒலியைப்போல் பெரிய
घुर्घुरैः - ‘ குர்குர்' என்ற 
घोणा रवै: - மூக்கின் ஒலிகளால் 
पवित्रीकृत ब्रह्माण्डः - ப்ரஹ்மாண்டங்களைப் பரிசுத்தமாக்கிய  
कुहना पोत्री - கபட வராஹ வடிவங்கொண்ட எம்பெருமான் 
जगन्ति — உலகங்களை 
 अनिशं - எப்பொழுதும் 
गोपायेत् - காத்தருள வேண்டும்
यत्  दंष्ट्रा - எவனுடைய கோரைப்பல்லாகிய 
अङ्कुर कोटि - முளையின் நுனிப் பகுதியில்
 गाढ घटना  - இறுகப் பற்றியதால் 
निष्कम्प नित्य स्थितिः  - எப்பொழுதும் அசையாமலிருப்பவளாய் 
भगवती  - பெருமை பொருந்திய 
असौ -  இந்த 
विश्वंभरा - பூமிதேவி 
मुस्ता इव  - கோரைக் கிழங்கு போல் நின்று 
ब्रह्म स्तम्बम्  -  பிரமன் முதல் துரும்பு வரை உள்ள சராசரங்களை 
असौत् - படைத்தாளோ.

வராஹாவதார வர்ணநம்
ப்ரளய காலத்தில் பூமி கடலுள் மூழ்கிவிட்டது. இந்தப் பூமியைக் கடலினின்று எடுத்து வருவதற்காக எம்பெருமான் ஒரு பெரிய பன்றி வடிவுகொண்டு அவதரித்தான். அந்த வராஹப் பெருமானது திருமூக்கினின்று 'குர் குர்' என்ற ஒலிகள் எழுகின்றன. இவ்வொலிகள் ப்ரளய காலத்துக் கடலின் அலைகள் மோதும் ஒலிகளைப்போல் மிகுத்திருந்தன. இவ்வொலிகள் ப்ரஹ்மாண்டங்கள் முழுதும் பரவி அவற்றைத் தூய்மையாக்கின. இவ்வொலிகளுடன் வராஹப்பெருமான் தனது கோரைப் பல்லின் முனையில் பூமியைத் தரித்து எடுத்து வருகின்றான். அப்பூமி ஒரு பன்றியின் கோரைப்பல்லின் முனையில் கோரைக்கிழங்கு ஒட்டியிருப்பதுபோல் காட்சி தருகின்றது. வராஹப்பிரானுடைய கோரைப்பல்லில் பூமிதேவி நன்கு இறுகப் பற்றியிருப்பதால் சிறிதும் அசையாமல் நிலைத்திருக்கின்றாள். இப்பூமிதேவி கோரைக்கிழங்குபோல் நின்று பிரமன் முதல் துரும்பு வரை உள்ள சராசரங்களாகிய பல கோரைப்புற்கள் உற்பத்தியாகக் காரணமாகின்றாள். இந்த வராஹப்பிரானுடைய திருமூக்கின் ஒலிகள் உலகங்களை எப்பொழுதும் காத்தருளவேண்டும்.

Varahan, The Great Boar Who Saved the Earth
During the time of the great destruction called Pralaya, the Earth - BhuDevi sank into the deep ocean. To save her, Lord Vishnu took the form of a huge boar known as Varaha. From His holy nose came loud “gur gur” sounds, like the powerful crashing waves of the ocean, and these sounds spread through all the universes and made them pure. Lord Varaha gently lifted the Goddess Earth on the tip of His sharp tusk, and she looked like a small root stuck to a boar’s tusk. Goddess Earth, called Bhudevi, held firmly to His tusk and did not shake even a little. Standing there like a root, she became the cause for all living and non-living things—from Brahma to the smallest blade of grass—to grow and exist in the world. May the sacred sound from Lord Varaha always protect all the worlds.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam