Saturday, February 7, 2026

Hayagriva Stotram - 24 - Hayagriva’s Divine Hand with the Japa Mala That Showers the Nectar of Knowledge

    श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

चित्ते करोमि स्फुरिताक्षमालं 
सव्येतरं नाथ करं त्वदीयम् । 
ज्ञानामृतोदञ्चन लम्पटानां 
लीलाघटी यन्त्रमिवाश्रितानाम् ।। 24

पदच्छेदः
चित्ते करोमि स्फुरित अक्षमालं 
सव्येतरं नाथ करं त्वदीयम् । 
ज्ञान अमृत उदञ्चन लम्पटानां 
लीलाघटी यन्त्रम् इव आश्रितानाम् ।। 24

नाथ - ஸ்வாமி ! 
स्फुरित अक्षमालं - ஜப மாலை விளங்கப்பெற்றதாய் 
ज्ञान अमृत - ஞானமாகிய அமுதத்தை 
उदञ्चन लम्पटानां  - மேலே எடுப்பதில் ஆர்வ முடையவரான 
आश्रितानाम् - அடியார்களுக்கு 
लीलाघटी यन्त्रम् इव  - எளிதில் அமைந்த (விளையாட்டாகவுள்ள)  கவலையேற்றம்போலுள்ள 
त्वदीयम्  -உன்னுடையதான 
सव्य इतरं – வலது 
करं - திருக்கையை 
चित्ते - உள்ளத்தில் 
करोमि - கொள்கின்றேன். 

ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே! உனது மற்றொரு வலத்திருக்கையில் ஜபமாலை விளங்குகின்றது. இத்திருக்கை சற்று கீழ் நோக்கியிருப்பதை நோக்கும்பொழுது உன்னிடமிருந்து ஞான மென்னும் அமுதத்தைப் பெற மிக்க ஆர்வம் கொண்டுள்ள அடியார்களுக்கு அவ்வமுதத்தை எடுத்துக் கொடுப்பதாய்த் தோன்றுகிறது. உலகில் கவலையேற்றம் நீரைக் கிணற்றிலிருந்து முகந்து முகந்து வெளியில் கொட்டுவதுபோல் உன் திருக்கையும் ஞான அதத்தை அள்ளி அள்ளி அளிக்கும் தோற்றத்தை உண்டாக்குகின்றது. உனது இந்தத் திருக்கையை உள்ளத்துக்கொண்டு தியானிக்கின்றேன்.

O Lord Hayagriva! In your other right hand, the japa mala shines beautifully. When this divine hand is seen slightly bent downward, it appears as if you are giving the nectar of knowledge to your devotees who eagerly long to receive it from you. Just as water is drawn again and again from a well and poured out, your divine hand seems to gather and generously pour out the nectar of knowledge through those Japa mala. I hold this divine hand of yours in my heart and meditate upon it.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam