श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
श्रीहयग्रीवस्तोत्रम् - Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
प्रबोधसिन्धोररुणैः प्रकाशैः
प्रवालसङ्घातमिवोद्वहन्तम् ।
विभावये देव सपुस्तकं ते
वामं करं दक्षिणमाश्रितानाम् ।। 25
पदच्छेदः
प्रबोध सिन्धो: अरुणैः प्रकाशैः
प्रवाल सङ्घातम् इव उद्वहन्तम् ।
विभावये देव सपुस्तकं ते
वामं करं दक्षिणम् आश्रितानाम् ।। 25
देव - பெருமானே !
अरुणैः - செந்நிறமான
प्रकाशैः - ஒளிகளால்
प्रबोध सिन्धो: - ஞானக் கடலினின்று
प्रवाल - பவழங்களின்
सङ्घातम् - தொகுதியை
उद्वहन्तम् इव - எடுத்துக்கொண்டிருப்பதுபோன்றதாய்
आश्रितानाम् - அடியார்கள் விஷயத்தில்
दक्षिणम् - வல்லமையுடையதாய்
सपुस्तकं - புத்தகத்தையுடையதாயுள்ள
ते - உன்னுடைய
वामं करं - இடத்திருக்கையை
विभावये - தியானிக்கின்றேன்.
ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே ! உன் இடத்திருக்கைகள் இரண்டனுள் ஒன்றில் புத்தகத்தைத் தாங்கியுள்ளாய். திருக்கையின் செம்மை நிறமான ஒளி சுற்றிலும் பரவியுள்ளது. இதைக் காணுங்கால் ஞானமாகிய கடலினின்று எடுத்த பவழங்களின் தொகுதி போல் தோன்றுகின்றது. அடியார்களுக்கு வேண்டிய பலனைத் தரவல்ல இத் திருக்கையை இடைவிடாது சிந்திக்கின்றேன்.
[தக்ஷிண-வலம், வாம-இடம், திருக்கை தக்ஷிணமாயும் வாமமாயுமிருப்பதென்பது முரண்பாடு. தக்ஷிண என்ற சொல்லுக்கு வல்ல என்ற பொருளைக் கொண்டு முரண்பாடு நீங்கும். இது ஒரு கவிநயம்.]
O Sri Hayagriva Perumal! Among Your two divine hands in left side, in one hand You hold a book, and a gentle reddish light spreads in all directions from that sacred hand. When I see it, it appears like a cluster of corals taken from the vast ocean of knowledge. I constantly think about and meditate upon that divine left hand, which is powerful enough to grant devotees the blessings and benefits they seek.
(“Dakshina–Right” and “vama–Left” may seem contradictory, because the same divine hand is described as both right and left. This confusion is removed when the word “dakshina” is understood to mean “powerful” or “capable.” This is an example of poetic beauty.)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
SarvamSriKrishnarpanam