Monday, February 9, 2026

Hayagriva Stotram - 26 - Hayagriva’s Moon like White Radiance That Removes Ignorance

  श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

तमांसि भित्त्वा विशदैर्मयूखैः 
संप्रीणयन्तं विदुषश्चकोरान् । 
निशामये त्वां नवपुण्डरीके 
शरद्धने चन्द्रमिवस्फुरन्तम् ।। 26

पदच्छेदः
तमांसि भित्त्वा विशदै: मयूखैः 
संप्रीणयन्तं विदुष: चकोरान् । 
निशामये त्वां नव पुण्डरीके 
शरत् घने चन्द्रम् इव स्फुरन्तम् ।। 26

विशदै:- வெண்மையான 
मयूखैः -  ஒளிகளால் 
तमांसि  - (அஞ்ஞான) இருட்களை 
भित्त्वा - ஒழித்து 
विदुष: - வித்வான்களாகிய 
चकोरान् - சகோர பக்ஷிகளை 
संप्रीणयन्तं - மகிழச் செய்கின்றவனாய் 
शरत् घने - சரத்காலத்து மேகத்தில் 
चन्द्रम् इव - சந்திரனைப்போல் 
नव पुण्डरीके  - புதிய வெண்டாமரையில் 
स्फुरन्तम् - விளங்குகின்ற 
त्वां - உன்னை 
निशामये - உட் கண்ணால் பார்க்கிறேன்.

ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே! உன்னுடைய வெண்மையான ஒளிகளால் உலகிலுள்ள அஞ்ஞானத்தையெல்லாம் ஒழித்தருளி,  வித்வான்களை மிக மகிழ்விக்கின்றாய்; புதிதாய் மலர்ந்த வெண் தாமரைப் பூவின்மேல் எழுந்தருளியுள்ளாய். உன்னை இந்நிலையில் ஸேவிக்கும்போது சரத் (ஐப்பசியும் கார்த்திகையும்) காலத்து வெண்ணிற மேகத்தில் உறையும் சந்திரன் தன் வெண்மை ஒளியால் இருளைப் போக்கி,  நிலவையே உணவாகக் கொண்டுள்ள சகோர பட்சிகளை மகிழச் செய்யும் திறன் உவமையாகத் தோன்றுகின்றது. இத்தகைய உனது திருமேனியை ஸேவிக்கப் பாரிக்கின்றேன்.

O Sri Hayagriva Perumal! With Your pure white radiance, You remove all ignorance from the world and greatly delight learned scholars. You are seated upon a freshly bloomed white lotus. When I see You in this divine form, You appear like the moon shining from a white autumn cloud during the Sharad season (Aippasi and Karthigai), whose bright light removes darkness and gives joy to the chakora birds that live only on moonlight. I long to see and worship such a beautiful divine form of Yours.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam