श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
श्रीहयग्रीवस्तोत्रम् - Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
दिशन्तु मे देव सदा त्वदीयाः
दयातरङ्गानुचराः कटाक्षाः ।
श्रोत्रेषु पुंसाममृतं क्षरन्तीं
सरस्वतीं संश्रित कामधेनुम् ।। 27
पदच्छेदः
दिशन्तु मे देव सदा त्वदीयाः
दया तरङ्ग अनुचराः कटाक्षाः ।
श्रोत्रेषु पुंसाम् अमृतं क्षरन्तीं
सरस्वतीं संश्रित कामधेनुम् ।। 27
देव - ஸ்வாமி |
दया तरङ्ग अनुचराः - கருணை அலைகளைத் தொடருகின்ற
त्वदीयाः உன்னுடையனவான
कटाक्षाः - கடாக்ஷங்கள்
पुंसाम् - மனிதர்களின்
श्रोत्रेषु - செவிகளில்
अमृतं - அமுதத்தை
क्षरन्तीं - பெருக்குவதாய்
संश्रित - அடியார்களுக்கு
कामधेनुम् - காமதேனு போன்றதாயுள்ள
सरस्वतीं - வாக்கை
सदा - எப்பொழுதும்
मे - எனக்கு
दिशन्तु - அருளவேண்டும்.
ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே ! கரைபுரண்ட கருணையோடு நீ என் மீது சொரியும் திவ்ய கடாக்ஷங்கள் எப்பொழுதும் கவிபாடும் வல்லமையை அடியேனுக்கு அளிக்கவேண்டும். அடியேன் பாடும் கவிகள் கேட்பவர் செவிகளுக்கு அமுதத்தைப் பெருக்குவனவாயிருக்க வேண்டும். மேலும் அந்தக் கவிகளை அநுஸந்திக்கும் அடியார்களுக்கு அவை காமதேனுவைப்போல் இருந்து அவர்கள் விரும்பும் எல்லாப் பலன்களையும் அளிக்கவேண்டும். இத்தகைய கவிபாடும் திறமையை அடியேன் உன் கருணா கடாக்ஷத்தால் பெறவேண்டும்.
“O Sri Hayagriva Perumane! With overflowing compassion, may Your divine, merciful glances always shower upon me and grant me the ability to compose poetry. The poems that I sing should pour nectar into the ears of those who listen. Further, for the devotees who reflect upon these poems, may they be like a wish-fulfilling cow Kamadhenu, granting all the fruits they desire. May I receive such poetic ability only through Your compassionate grace.”
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
SarvamSriKrishnarpanam