श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
श्रीहयग्रीवस्तोत्रम् - Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
विशेषवित्पारिषदेषु नाथ
विदग्ध गोष्ठी समराङ्गणेषु ।
जिगीषतो मे कवितार्किकेन्द्रान्
जिह्वाग्र सिंहासनमभ्युपेयाः ।। 28
पदच्छेदः
विशेष वित् पारिषदेषु नाथ
विदग्ध गोष्ठी समर अङ्गणेषु ।
जिगीषत: मे कवि तार्किक इन्द्रान्
जिह्वा अग्र सिंहासनम् अभ्युपेयाः ।। 28
नाथ - ஸ்வாமி !
विशेष वित् - விசேஷாம்சங்களை அறிந்தவர்களை
पारिषदेषु — மத்யஸ்தராகக் கொண்ட
विदग्ध गोष्ठी - நிபுணர் குழுவின்
समर अङ्गणेषु - வாதப் போர்க்களங்களில்
कवि - கவிகளிலும்
तार्किक - யுக்திவாதம் செய்பவர்களிலும்
इन्द्रान् - சிறந்தவர்களை
जिगीषत: - ஜயிக்க விரும்புகின்ற
मे - என்னுடைய
जिह्वा अग्र - நாவின் நுனியாகிய
सिंहासनम् - சிங்காதனத்தில்
अभ्युपेयाः - அமர்ந்தருள வேண்டும்.
ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே! நன்கு கற்றறிந்த வித்வான்களை மத்யஸ்தராகக் கொண்டு புரியும் வாதப் போர்க்களத்தில் பெரிய மேதாவிகள் கோஷ்டியில் அடியேன் கலந்துகொள்ள வேண்டும். அச்சபையில் பிற மதத்தினரான கவிபாடுமவர்களையும் யுக்திகளைப் பேசுமவர்களையும் அடியேன் வாதத்தில் வெற்றிகொள்ள வேண்டும். அடியேனது இவ்விருப்பத்தை நீ நிறைவேற்றியருளவேண்டும். அதற்குப் பாங்காக அடியேனது நாவின் நுனியை உனக்கு ஏற்ற சிங்காதனமாகக் கொண்டு அதில் எழுந்தருள வேண்டும்.
O Sri Hayagriva Perumane! In the battlefield of debate, where learned scholars act as neutral judges and great intellectuals gather, may I be able to take part. In that assembly, may I win debates against poets of other faiths and those who argue using clever reasoning. Please fulfill this desire of mine. To make this happen, please accept the tip of my tongue as a throne worthy of You and graciously reside there.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
SarvamSriKrishnarpanam