Friday, February 6, 2026

Hayagriva Stotram - 23 - Hayagriva Is the Kalpaka Tree; His Jnana Mudra, the Knowledge-Kindling Stick

   श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

संचिन्तयामि प्रतिभा दशास्थान् 
संधुक्षयन्तं समय प्रदीपान् । 
विज्ञान कल्पद्रुम पल्लवाभं 
व्याख्यान मुद्रा मधुरं करं ते ।। 23

पदच्छेदः
संचिन्तयामि प्रतिभा दशास्थान् 
संधुक्षयन्तं समय प्रदीपान् । 
विज्ञान कल्पद्रुम पल्लव आभं 
व्याख्यान मुद्रा मधुरं करं ते ।। 23

प्रतिभा - மேதையாகிய  (பண்டிதர், அறிஞர், ஞானி)
दशास्थान् - திரியிலே இருக்கின்ற 
समय प्रदीपान्  - ஸித்தாந்தங்களாகிய தீபங்களை 
संधुक्षयन्तं — நன்றாய்த் தூண்டிவிடுவதாய் 
विज्ञान - ஞானமயமான உன் வடிவென்னும் 
कल्पद्रुम -- கற்பக மரத்தின் 
पल्लव आभं  - தளிர்போன்ற ஒளியுடையதாய் 
व्याख्यान मुद्रा  - ஞான உபதேச முத்திரையால் 
मधुरं - அழகியதாயுள்ள 
ते करं  - உனது திருக்கையை 
संचिन्तयामि - இடைவிடாது தியானிக்கின்றேன்.  

ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே! உன் வலது திருக்கை அடியார்களுக்கு ஞானோபதேசம் செய்வதற்கு ஏற்ற ஞானமுத்திரையால் மிக அழகு பெறுகின்றது. இந்தத் திருக்கை சிறந்த மேதையால் (பண்டிதரால்) அறியவேண்டிய ஸித்தாந்தங்களாகிய ஸாரார்த்தங்களை எல்லாம் அந்த ஞான முத்திரையின் வாயிலாக நன்கு விளக்கி உலகிலுள்ளோர் அறியுமாறு செய்கின்றது. ஆகவே மேதையாகிய (பண்டிதர்களாகிய) திரியால் பிரகாசிக்கும் வேதாந்தார்த்தங்களென்னும் தீபங்களுக்குத் தூண்டுகோலாய் விளங்குவது உன் திருக்கை. தியானிப்பவர் விரும்புமதைத் தரும் ஞானமயமான உன் திருமேனி கற்பகமரம் போன்றது. அதன் தளிர்போன்றது உன் திருக்கை. அடியார்களுக்கு ஞானத்தையளிக்கும் இந்தத் திருக்கையை எப்பொழுதும் சிந்திக்கின்றேன். 

O Lord Hayagriva! Your right divine hand is made beautiful by the Jnana Mudra, which is perfect for giving spiritual knowledge to your devotees. Through this sacred gesture (mudra), your hand clearly explains all the deep truths and essential principles that can be understood only by great scholars, so that people of the world may know them. Therefore, your divine hand serves as the guiding support that kindles the lamps of Vedantic wisdom, which shine through refined intellect. Your knowledge-filled divine form is like a Kalpaka tree that grants whatever the meditator desires, and your right hand is like its tender sprout. I always meditate upon this divine hand of yours, which lovingly grants knowledge to your devotees. 

Notes by Sri:

இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ள 2 உவமைகள் :

விவரிக்கப்படுவது

ஒப்பிடப்படுவது

உவமையின் பொருள்

ஹயக்ரீவனின்  ஞானமய திருமேனி

கற்பக மரம்

கற்பகமரம் விரும்பியதை அளிப்பதுபோல், அவரின் திருமேனி தியானிப்பவர்களுக்கு வேண்டிய ஞானத்தை அருள்கிறது.

ஹயக்ரீவனின் வலது திருக்கை

கற்பக மரத்தின் இளங்கிளை/தளிர்

மரத்திலிருந்து இயல்பாக முளைக்கும் இளங்கிளைப்போல், வலது திருக்கை சுலபமாக ஞானத்தை வழங்குகிறது.

விவரிக்கப்படுவது

ஒப்பிடப்படுவது

உவமையின் பொருள்

மேதைகள் (பண்டிதர்கள்)

திரி

 

வேதாந்த ஞானம்

விளக்குகள்

திரியால் தீபம் பிரகாசிப்பது போலே பண்டிதர்களால் வேதாந்தார்த்தங்கள் பிரகாசிக்கின்றன.

ஹயக்ரீவனின் திருக்கை ஞான முத்திரை

தூண்டுகோல்

தூண்டுகோல் தீபத்தை தீண்டிவிடுவது போலே ஹயக்ரீவனின் திருக்கை ஞான முத்திரை வேதாந்தார்த்தங்களை விளக்குகிறது.

Two Similes explained in this sloka:

Item Described

Compared To

Meaning of the Simile

Hayagriva’s knowledge-filled divine form

Kalpaka tree

Just as the Kalpaka tree grants whatever is desired, His divine form grants the knowledge sought by the meditator.

Hayagriva’s  right divine hand

Tender sprout of the Kalpaka tree

Like a fresh sprout that grows from the wish-fulfilling tree, His right hand naturally and gently gives spiritual knowledge.

Item Described

Compared To

Meaning of the Simile

Great Scholars

Wick

 

Vedantic meanings 

Lamps

Just as a lamp shines because of its wick, Vedantic meanings shine because of great scholars.

Lord Hayagriva’s right hand in Jnana Mudra

Kindling Stick

Just as a kindling stick touches the lamp and makes it glow more, Lord Hayagriva’s hand in Jnana Mudra explains and reveals the Vedantic meanings.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam