Sunday, February 15, 2026

Hayagriva Stotram - 32 - Meditation verse on Sri Hayagriva

      श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

व्याख्यामुद्रां करसरसिजैः पुस्तकं शङ्खचक्रे 
बिभ्रद्भिन्न स्फटिक रुचिरे पुण्डरीके निषण्णः । 
अम्लानश्रीरमृतविशदैरंशुभिः प्लावयन् मां 
आविर्भूयादनघमहिमा मानसे वागधीशः ।। 32

पदच्छेदः
व्याख्यामुद्रां कर सरसिजैः पुस्तकं शङ्ख चक्रे 
बिभ्रत् भिन्न स्फटिक रुचिरे पुण्डरीके निषण्णः । 
अम्लानश्री: अमृत विशदै: अंशुभिः प्लावयन् मां 
आविर्भूयात् अनघ महिमा मानसे वाग् अधीशः ।। 32

कर सरसिजैः -  தாமரை  போன்ற (நான்கு) திருக்கைகளால் 
व्याख्यामुद्रां  -  ஞான உபதேச முத்திரையையும் 
पुस्तकं - புத்தகத்தையும் 
शङ्ख चक्रे  - திருச்சங்கையும் திருவாழியையும் 
बिभ्रत् - ஏந்தியவனாய் 
भिन्न स्फटिक - விண்ட படிகத்துண்டம்போல் 
रुचिरे - அழகிய 
पुण्डरीके - வெண்டாமரையில் 
निषण्णः  எழுந்தருளியிருப்பவனாய்
अम्लानश्री: - குன்றாத ஒளியுடையவனாய்  
अनघ महिमा  - குற்றமற்ற  பெருமையுடையவனாய் 
वाग् अधीशः  - வாக்குக் கடவுளாகிய ஸ்ரீஹயக்ரீவன்
अमृत विशदै: - அமுதம் போல் வெண்மையான 
अंशुभिः: - ஒளிகளால் 
मां - அடியேனை 
प्लावयन् - மூழ்கச் செய்து கொண்டு 
 मानसे - மனத்தில் 
आविर्भूयात् - தோன்ற வேண்டும். 

ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானது தியானச் சுலோகம் இது. அவன் தாமரை போன்ற தன் நான்கு திருக்கைகளுள் இரண்டு பின் திருக்கைகளால் திருவாழியையும் திருச்சங்கையும் இரண்டு முன் திருக்கைகளால் ஞானமுத்திரையையும் புத்தகத்தையும் ஏந்தி நிற்கின்றான். படிகமணியின் விண்ட பகுதியோ என்னும் படியுள்ள மிக அழகிய வெண்டாமரைப் பூவில் எழுந்தருளியுள்ளான். அவனுடைய ஒளி எந்நாளும் குன்றுவதில்லை. குற்றம் கலவாத அவனது பெருமைக்கு அளவில்லை. கல்விக்கு முதற் கடவுளாகிய இத்தகைய ஸ்ரீ ஹயக்ரீவப்பெருமான் அமுதம்போல் வெண்மையாய்க் குளிர்ந்துள்ள தன் ஒளிகளை வீசி அடியேனைக் குளிரச் செய்துகொண்டே அடியேனது உள்ளத்தில் எந்நாளும் எழுந்தருளியிருக்கவேண்டும்.

This is the meditation verse on Sri Hayagriva. With His four lotus-like divine hands, He holds the Sudarshana Chakra and the Panchajanya conch in His two back hands, and shows the Jnana Mudra and holds a book in His two front hands. He is seated on a beautiful white lotus that looks like a split crystal gem. His divine light never fades. His greatness is pure and without any fault, and it has no limit. Such Sri Hayagriva, the first and foremost Lord of learning, should spread His cool, nectar-like white rays upon me, refresh me, and always remain shining in my heart.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam