Friday, March 6, 2026

Bhagavad Dhyana Sopanam - 05 - திருவுந்தி வர்ணநம் - The Sacred Navel

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीभगवद्धयान सोपानम् Bhagavad Dhyana Sopanam ஸ்ரீ பகவத் த்யாந ஸோபாநம்

संप्रीणाति प्रतिकलमसौ मानसं मे सुजाता 
गम्भीरत्वात् क्वचन समये गूढ-निक्षिप्त-विश्वा । 
नालीकेन स्फुरित-रजसा वेधसो निर्मिमाणा 
रम्यावर्त-द्युति-सहचरी रङ्गनाथस्य नाभिः ॥ 5

पदच्छेदः
संप्रीणाति प्रतिकलम् असौ मानसं मे सुजाता 
गम्भीरत्वात् क्वचन समये गूढ निक्षिप्त विश्वा । 
नालीकेन स्फुरित रजसा वेधस: निर्मिमाणा 
रम्य आवर्त द्युति सहचरी रङ्गनाथस्य नाभिः ॥ 5

सुजाता - அழகிய தோற்றமுடையதாய் 
गम्भीरत्वात् - ஆழமாயிருப்பதால் 
क्वचन समये - ஒரு சமயத்தில் 
गूढ निक्षिप्त विश्वा - உலகத்தை தனக்குள் மறைத்து வைத்துக்கொண்டதாய் 
स्फुरित रजसा - தூள்கள் மிளிரப்பெற்ற 
नालीकेन  - தாமரைப்பூவால் 
वेधस: - பல பிரமர்களை 
निर्मिमाणा - படைப்பதாய் 
रम्य आवर्त - அழகிய சூழல்களின் 
द्युति सहचरी - அழகுடன் கூடியதாயுள்ள 
रङ्गनाथस्य - திருவரங்க நகரப்பனது 
असौ - இந்த 
नाभिः - திருவுந்தி 
प्रतिकलम् - நிமிடந்தோறும் 
मे मानसं  - எனது உள்ளத்தை 
संप्रीणाति - மிக மிகழச் செய்கின்றது

திருவுந்தி வர்ணநம்

திருவரங்கனது அழகிய திருவுந்தி மிக ஆழமாயிருப்பதால் பிரளய காலத்தில் உலகம் முழுவதையும் தனக்குள் மறைத்து வைத்துக் கொள்ளவல்லது ; இந்த உந்தியில் தோன்றிய தாமரைப்பூ தன்னிடம் படிந்த துகள்களாலே பல பிரமதேவர்களைப் படைக்கும் சக்தியுடையதாகும். நீர் வெள்ளம் மிகுத்தால் சுழல் ஏற்படுவது இயற்கை. திருவரங்கனது திருமேனியின் அழகு வெள்ளமிட்டுப் பெருகும்போது அதில் தோன்றிய சுழலோ இந்தத் திருவுந்தியென்று நினைக்க ஏற்றதாயுள்ளது. இந்தத் திருநாபி அடியேன் உள்ளத்தில் உறைந்து ஒவ்வொரு கணமும் மிக்க மகிழ்ச்சியை விளைவிக்கின்றது.

(இங்கு நற்குலத்துப் பிறந்த ஒரு பதிவிரதைப்பெண் விசால மனம் பெற்றவளாய் வீட்டில் உள்ள சிறு பிணக்குக்களை வெளியிடாது மறைத்து ருதுப் பருவம் நீங்கும் வரையிலும் சிறந்த புத்திரர்களைப் பெற்றுக்கொண்டு உற்ற தோழியுடன் நல்வழி நின்று தன் கணவனை மகிழ்விக்கும் வரலாறு குறிப்பிட்ட சுவை காண்க.]

 The Sacred Navel of Lord Ranganatha

The beautiful divine navel of Lord Ranganatha is very deep. It is said that during the time of Pralaya (the great dissolution), He can hold the entire universe within Himself. From this sacred navel arose a lotus flower, and from that lotus came many Brahmas, who have the power to create the worlds. When floodwaters rise greatly, whirlpools naturally form. In the same way, when the flood of beauty from Lord Ranganatha’s divine body overflows, this sacred navel appears like a whirlpool formed in that ocean of beauty. This holy navel now rests in my heart and gives me great joy at every moment.

 (A sweet inner meaning is also hinted here: just as a noble and devoted wife, born in a good family, keeps small troubles within herself and patiently preserves harmony at home while raising worthy children and pleasing her husband, so too the Lord’s navel holds and protects creation within Himself.)

 Note : Meditate on the sacred navel of Ranganathan to be joyful every moment.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam