श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
திருக்கைகள் வர்ணநம்
தேவலோகத்திலுள்ள
கற்பக மரம் மற்ற பலன்களை அளிக்க வல்லதாயினும், மோக்ஷமென்னும்
பெரும்பயனை அளிக்கும் திறமுடையதன்று. அரங்கனுடைய திருக்கைகளோ எல்லோருக்கும்
எல்லாப் பயன்களையும் அளிப்பது மட்டுமன்றி ப்ரபத்தியைச் செய்தவர்களுக்கு
மோக்ஷத்தையும் அளிக்கவல்லனவாதலின் இவை விசித்திரமான கற்பக மரம் போன்றவை. இவற்றுள்
வலத் திருக்கையை விளையாட்டாகத் தன் திருமுடிக்குக் கீழே தலையணையாகக் கொண்டுள்ளான்
அரங்கன். இடத் திருக்கை அவனுடைய முழந்தாளளவும் நீண்டு விளங்குகின்றது. என் சிந்தனை
இந்த இரண்டு திருக்கைகளின் அழகிலேயே ஆழ்ந்து கிடப்பதால் பேரின்பம் பெற்ற
செருக்குக் கொண்டுள்ளது. உலகில் மிக்க செருக்குக் கொண்டு திரியும் ஒரு பெண்
யானையைப் பெருங்கயிறுகளாலோ சங்கிலிகளாலோ கட்டிப் பிணித்துக் கட்டுத்தறியில்
அடைத்தால் அடங்கி நிற்பதுண்டு. என் சிந்தனையே செருக்குக் கொண்ட ஒரு
பெண்யானையாகும். திருவரங்கனுடைய திருவாபரணங்களின் பலவித ஒளிகளாகிய கயிறுகளால் என்
சிந்தனை கட்டுப்பட்டு அவன் திருக்கைகளாகிய விசித்திரமான கட்டுத்தறியில் அடங்கித்
தன் செருக்கொழியப் பெற்று இன்பப்போதையில் மயங்கிக் கிடக்கின்றது.
The Divine Hands of Lord Ranganatha
The wish-fulfilling Kalpaka tree in heaven can grant many blessings, but it cannot give the greatest gift of all—moksha (liberation). However, the sacred hands of Lord Ranganatha are like a special and wonderful Kalpaka tree. They not only grant all kinds of blessings to everyone but also give moksha to those who surrender to Him. That is why His hands are truly extraordinary.
With playful ease, the Lord places His right hand beneath His head like a pillow. His left hand stretches down gracefully to His knee. My mind is deeply immersed in the beauty of these two divine hands and feels great joy and pride.
In this world, if a proud female elephant is tied with strong ropes or chains and secured to a post, it becomes calm and controlled. In the same way, my mind is like a proud female elephant. It is now bound by the shining rays of the Lord’s divine ornaments, which act like ropes, and is tied to the wonderful post of His sacred hands. Losing its pride, my mind now rests there peacefully, filled with bliss.
Notes by Sri:
இந்த
ச்லோகத்தில் கூறப்பட்டுள்ள உவமைகள் :
|
விவரிக்கப்படுவது |
ஒப்பிடப்படுவது |
உவமையின் பொருள் |
|
அரங்கனுடைய திருக்கைகள் |
கற்பக மரம் |
தேவலோக கற்பக மரம் பலன்களை அளிப்பதுபோல், திருக்கைகள் எல்லாப் பயன்களையும்
அளித்து, ப்ரபத்தி செய்தவர்களுக்கு மோக்ஷத்தையும்
அளிக்கின்றன. |
|
வலத் திருக்கை (திருமுடிக்குக் கீழ்) |
தலையணை |
விளையாட்டாகத் தன் கையைத் தலையணையாக வைத்திருக்கும் சௌலப்ய ஸ்வபாவம்
வெளிப்படுகிறது. |
|
அடியேன் சிந்தனை |
செருக்குடைய பெண்யானை |
சிந்தனை வலிமையும் அகந்தையும் கொண்டு அலைகிறது என்பதைக் காட்டுகிறது. |
|
திருவாபரணங்களின் ஒளி |
கயிறுகள் / சங்கிலிகள் |
ஆபரணங்களின் ஒளி கயிறுபோல் சிந்தனையை கட்டுப்படுத்துகிறது. |
|
திருக்கைகள் |
கட்டுத்தறி (யானை கட்டும் தூண்) |
யானை கட்டுத்தறியில் அடங்கி நிற்பதுபோல், சிந்தனை திருக்கைகளில் அடங்கி
அமைதியடைகிறது. |
Similes
used in this sloka:
|
Item Described |
Compared To |
Meaning of the Simile |
|
Lord Ranganatha’s Divine Hands |
Kalpaka (wish-fulfilling) tree |
Like the heavenly tree that grants wishes, His
hands grant all blessings—and even moksha. |
|
The Right Hand under His Head |
A pillow |
He gently uses His own hand as a soft pillow in a
relaxed, playful pose. |
|
The Devotee’s Mind |
A proud female elephant |
The mind is strong, restless, and filled with
pride. |
|
The Light from His Ornaments |
Ropes or chains |
The shining rays of His ornaments act like ropes
that bind and control the restless mind. |
|
His Divine Hands |
A tying post (elephant post) |
Just as an elephant is tied to a post and becomes
calm, the mind becomes steady when fixed on His hands. |
SarvamSriKrishnarpanam