Monday, March 9, 2026

Bhagavad Dhyana Sopanam - 08 - திருமுக வர்ணநம் - The Divine Face

  श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीभगवद्धयान सोपानम् Bhagavad Dhyana Sopanam ஸ்ரீ பகவத் த்யாந ஸோபாநம்

साभिप्राय-स्मित-विकसितं चारु बिम्बाधरोष्ठं 
दुःखापाय-प्रणयिनि जने दूर-दत्ताभिमुख्यम् । 
कान्तं वक्त्रं कनक तिलकालङ्कृतं रङ्गभर्तुः 
स्वान्ते गाढं मम विलगति स्वागतोदार-नेत्रम् ॥ 8

पदच्छेदः
साभिप्राय स्मित विकसितं चारु बिम्ब आधर ओष्ठं 
दुःख अपाय प्रणयिनि जने दूर दत्त आभिमुख्यम् । 
कान्तं वक्त्रं कनक तिलक अलङ्कृतं रङ्गभर्तुः 
स्वान्ते गाढं मम विलगति स्वागत उदार नेत्रम् ॥ 8

साभिप्राय - கருத்து அடங்கிய 
स्मित विकसितं - புன்சிரிப்பால்  மலர்ந்ததாய் 
चारु बिम्ब - அழகிய கோவைக் கனி போன்ற
आधर ओष्ठं - கீழ்மேல் உதடுகளையுடையதாய்
दुःख अपाय - துன்பம் நீங்குவதை
प्रणयिनि - விரும்புகின்ற 
जने - மக்களிடத்தில் 
दूर दत्त आभिमुख्यम् -  தூரத்திலிருக்கும்போதே அவர்களைக் கடாக்ஷிப்பதாய் 
कान्तं - அழகியதாய்
कनक तिलक - பொன்னாலாகிய திலகத்தால் 
अलङ्कृतं - அழகு செய்யப் பெற்றதாய் 
स्वागत उदार नेत्रम् - நல்வரவு கூறும் பெருந்தன்மையுடைய திருக்கண்களையுடையதாயுள்ள 
रङ्गभर्तुः - திருவரங்கனுடைய 
वक्त्रं - திருமுகம் 
मम स्वान्ते - என் உள்ளத்தில் 
गाढं - உறுதியாக 
विलगति - ஆழ்ந்து பதிகின்றது.

திருமுக வர்ணநம்

திருவரங்கனது திருமுகமண்டலத்தில் அடியார்கள் விஷயத்தில் நல்ல கருத்தை வெளியிடும் புன்சிரிப்புத் தவழ்கின்றது. அதனால் திருமுகம் மிக மலர்ந்து விளங்குகின்றது. கீழ்-மேல் உதடுகள் கோவைக்கனிபோல் செம்மை நிறமாய் அழகியனவாயுள்ளன. தம் துன்பத்தை ஒழித்துக்கொள்ள விரும்பும் சேதநர்கள் தூரத்தில் வரும்போதே அரங்கன் தன் திருமுகத்தை அவர்கள் பக்கமாய்த் திருப்பிக் கடாக்ஷிக்கின்றான். அவன் பொன்னாலாகிய ஒரு திலகத்தைத் திருநெற்றியில் அணிந்திருப்பது திருமுகத்துக்கே ஓரழகைத் தருகின்றது. திருக்கண்களின் பெருமிடுக்கை நோக்கும்போது அடைதற்கு வருமவர்க்குத் திருமுகம் நல்வரவு கூறுவதுபோல் விளங்குகின்றது. இத்தகைய அரங்கனது திருமுகமண்டலம் அடியேனது உள்ளத்தில் ஆழப்பதிந்து விளங்குகின்றது.

The Divine Face

On the divine face of Lord Ranganatha, a gentle smile shines, showing His loving thoughts toward His devotees. Because of this smile, His face looks bright and fully blossomed like a flower. His upper and lower lips are red and beautiful like the kovai fruit. When people who wish to remove their sorrows come from a distance, the Lord turns His face toward them and blesses them with His kind glance. He wears a golden tilak on His forehead, which adds special beauty to His face. When we see the greatness and compassion in His divine eyes, it feels as if His face is warmly welcoming those who come to seek Him. Such a divine face of Lord Ranganatha is deeply printed in my heart and shines within me.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam