श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
கிரீட வர்ணநம்
திருவரங்கன் தன்
திருக்குழற் கற்றை மீது கிரீடத்தை அணிந்துள்ளான். அவன் மலர்மாலைகளைக்
குழற்கற்றைக்குள் அணிந்திருப்பதால் அவற்றின் நறுமணம் எப்பொழுதும் குழற்கற்றையில்
வீசிக்கொண்டேயிருக்கின்றது. பிராட்டிமார்கள் அரங்கனுடைய கேசங்களை வாரிமுடித்து
அலங்கரிக்கும்போது அவர்களின் திருக்கைப் பரிசம் பெறும் பாக்கியம் பெற்றது அந்தத்
தீருக்குழற்கற்றை. சோழநாட்டுப் பெண்களுக்குக் கோபம் வந்தால் அவர்கள் வக்கிரமான
பேச்சுக்களைப் பேசுவார்களாம். அரங்கனுடைய குழற்கற்றை அப்பெண்களின் பேச்சுப்போல்
வக்கிரமாய்ச் சுருண்டிருக்கின்றது. அக்குழல்மீது கிரீடம் அணியப் பெற்றிருப்பதால்
அதன் அடிப்பாகம் குழலில் நன்கு பதிந்துள்ளது. அரங்கன் பல்வகை இரத்தினங்கள் பதித்த
அணிகளைச் சிரத்தில் அணிந்துள்ளான். அந்த இரத்தினங்களின் ஒளி கிரீடத்தின்மீது
வீசுவதால் கிரீடமும் பல நிறங்கொண்டு விளங்குகின்றது. இத்தகைய அரங்கனது
கிரீடத்திலேயே அடியேனுடைய மனநிலைகள் ஊன்றி நிற்கின்றன. ஆதலின் இதுகாறும் அடங்காது
திரிந்துகொண்டிருந்த என் மன நிலைகள் இப்பொழுது ஒரு நல்ல தலைவனைப் பெற்று அவனுக்கு
அடங்கிக் கிடக்கின்றன.
The Divine Crown
Lord Ranganatha wears a crown
upon His beautiful curly hair. Since He decorates His hair with fresh flower
garlands, their sweet fragrance always spreads from His curls. When the divine
consorts lovingly comb and adorn His hair, those sacred curls receive the
blessed touch of their hands. It is said that when the women of the Chola
land become angry, their speech turns sharp and twisted; in the same way, the
Lord’s curls are charmingly twisted and curved. The crown rests firmly on
these curls, fitting closely at its base. The Lord also wears ornaments
set with many kinds of precious gems on His head, and the light from those gems
shines upon the crown, making it glow in many colors. My mind now stands firmly
fixed on this divine crown of the Lord. The thoughts that once wandered without
control have now found a noble master and remain peacefully surrendered to Him.
SarvamSriKrishnarpanam