Wednesday, March 11, 2026

Bhagavad Dhyana Sopanam - 10 - எல்லா அவயவாநுபவம் - Experience all the Divine parts

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीभगवद्धयान सोपानम् Bhagavad Dhyana Sopanam ஸ்ரீ பகவத் த்யாந ஸோபாநம்

पादम्भोजं स्पृशति भजते रङ्गनाथस्य जङ्घाम् 
ऊरुद्वन्द्वे विलगति शनैरूर्ध्वमभ्येति नाभिम् । 
वक्षस्यास्ते वलति भुजयोर्मामिकेयं मनीषा 
वक्त्राभिख्यां पिबति वहते वासनां मौळिबन्धे ।। 10

पदच्छेदः
पाद अम्भोजं स्पृशति भजते रङ्गनाथस्य जङ्घाम् 
ऊरु द्वन्द्वे विलगति शनै: ऊर्ध्वम् अभ्येति नाभिम् । 
वक्षसि आस्ते वलति भुजयो: मामिका इयं मनीषा 
वक्त्र अभिख्यां पिबति वहते वासनां मौळि बन्धे ।। 10

मामिका - என்னுடையதான 
इयं - இந்த 
मनीषा - புத்தியானது
रङ्गनाथस्य - திருவரங்கனுடைய 
पाद अम्भोजं - திருவடித் தாமரையை 
स्पृशति - தொடுகின்றது
जङ्घाम् - கணைக்காலை 
भजते - ஸேவிக்கின்றது.
ऊरु द्वन्द्वे - இரு தொடைகளிலும்
शनै: - மெல்ல 
विलगति - நன்கு படிகின்றது. 
ऊर्ध्वम् - மேலே 
नाभिम्  - திருவுந்தியை
अभ्येति - நெருங்குகின்றது
वक्षसि - திருமார்பில் 
आस्ते - தங்குகின்றது
भुजयो: - திருக்கைகளில் 
वलति - சுழல்கின்றது
वक्त्र - திருமுகத்தின் 
अभिख्यां - காந்தியை
पिबति - அள்ளிப்பருகுகின்றது
मौळि बन्धे - கிரீடத்தில் 
वासनां - நினைவை 
वहते - கொள்ளுகின்றது.

எல்லா அவயவாநுபவம்

இதுவரை ஸ்ரீதேசிகன் திருவரங்கனது திருமேனியில் ஒவ்வொரு பகுதியை ஒவ்வொரு சுலோகத்தால் அநுபவித்து இப்பொழுது ஒரே சுலோகத்தால் எல்லாப் பகுதிகளிலும் தம் மனம் ஈடுபட்டதைப் பேசுகின்றார் - என்னுடைய புத்தியெனும் ஒரு பெண் திருவரங்கன்பால் காதல்கொண்டு அவன் திருவடித் தாமரையை மெல்லத் தொடுகின்றாள்; பின்பு கணைக்காலைப் பக்தியுடன் தொழுகின்றாள்; அதன் மேலுள்ள தொடைகளிடம் மெல்லச் சென்று அவற்றில் ஆழ்ந்துவிடுகின்றாள்; அவற்றினின்றும் எழுந்து மேலுள்ள திருவுந்தியை நெருங்குகிறாள் ; பின் அகன்ற அவன் திருமார்பில் சற்று அமர்கின்றாள்; எழுந்து அவன் திருத்தோள்களின் அழகில் ஈடுபட்டு அவற்றைச் சுற்றிச் சுழலுகின்றாள் ; பின் திருமுக மண்டலத்தை அணுகி, அதன் அழகு வெள்ளமிட்டோடுவதைத் தன் கையால் அள்ளிப் பருகுகின்றாள். பின்பு கிரீடத்தின் நினைவில் மெய்ம்மறந்து நிற்கின்றாள். இப்படி என் மனம் அவனது திருமேனியையே பற்றிக்கொண்டு கிடக்கின்றது.

Experience all the Divine parts

Until now, Sri Desika has been enjoying each part of Lord Ranganatha’s divine body in separate verses. Now, in a single verse, he speaks about how his mind is absorbed in all the parts at once. My intellect, imagined as a woman, falls in love with Lord Ranganatha. She gently touches His lotus-like sacred feet. Then she worships His ankles with devotion. Slowly she moves upward to His thighs and becomes deeply immersed in them. Rising from there, she approaches His divine navel. Next, she rests for a while on His broad and sacred chest. Then she gets up and becomes absorbed in the beauty of His holy shoulders, moving around them in delight. After that, she comes near His divine face and scoops up and drinks in the flood of its beauty with her own hands. Finally, she stands lost in wonder at the thought of His crown. In this way, my mind clings completely to His divine form and remains there.



🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam