Sunday, April 5, 2026

Abheethi Stavam - 23- வைதீக தர்மம் நிலைத்திட சக்கரத்தாழ்வரிடம் ப்ரார்த்தனை - Prayer to the Sudarshana Chakra to reestablish Vaidheeka Dharma

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

Abheethi Stavam - 23- வைதீக தர்மம் நிலைத்திட சக்கரத்தாழ்வரிடம் ப்ரார்த்தனை - Prayer to the Sudarshana Chakra to reestablish Vaidheeka Dharma

दिति प्रभवदेहभिद्दहन सोम सूर्यात्मकं 
तमः प्रमथनं प्रभो समुदितास्त्र बृन्दं स्वतः । 
स्ववृत्ति वशवर्तित त्रिदश वृत्ति चक्रं पुनः 
प्रवर्तयतु धाम्नि ते महति धर्म चक्र स्थितिम् ॥ 23 ॥

पदच्छेदः
दिति प्रभव देहभित् दहन सोम सूर्य आत्मकं 
तमः प्रमथनं प्रभो समुदित अस्त्र बृन्दं स्वतः । 
स्व वृत्ति वशवर्तित त्रिदश वृत्ति चक्रं पुनः 
प्रवर्तयतु धाम्नि ते महति धर्म चक्र स्थितिम् ॥ 23 ॥

प्रभो   - பிரபுவே!
दिति प्रभव - திதியின் புதல்வரான அசுரரின் 
देहभित् - உடலைப் பிளப்பதாய் 
दहन सोम सूर्य आत्मकं - அக்நி சந்திரன் சூரியன் ஆகிய மூவரும் கூடியது போன்றதாய் 
तमः प्रमथनं - இருளைப் போக்கவல்லதாய் 
समुदित अस्त्र बृन्दं - மற்ற ஆயுதங்கள் கூடி நிற்குமிடமாய் 
स्व वृत्ति - தன் செயலுக்குள்
वशवर्तित - அடக்கப்பட்ட 
त्रिदश वृत्ति - தேவர்களின் வாழ்க்கையை யுடையதாயுள்ள 
चक्रं - சக்ராயுதம்
ते महति  धाम्नि   - உன் இருப்பிடமான திருவரங்கப் பெரு நகரில் 
धर्म चक्र स्थितिम् - தர்மச் சுழலின் நிலையை
स्वतः - தானாகவே
पुनः  - மறுபடியும் 
प्रवर्तयतु - நடத்தியருள வேண்டும்.

சக்கரத்தாழ்வரிடம் ப்ரார்த்தனை

திருவரங்கப் பெருமானே ! நீ வலத்திருக்கையில் ஏந்திய சக்கராயுதம் உன் அடியார்களுக்குப் பகைவரான அசுரர்களின் உடலைப் பிளக்கவல்லது. இதன் ஒளியைப் பார்க்கும்போது அக்நி - சந்திரன் - சூரியன் இவர்கள் மூவரும் ஒன்றுசேர்ந்திருப்பதுபோல் தோன்றுகின்றது. இவ்வாயுதம் தன் ஒளியாலே புறவிருளை மட்டுமன்றி அஞ்ஞான இருளையும் ஒழிக்க வல்லது. மற்ற எல்லா ஆயுதங்களும் இதினின்று தோன்றியதால் எல்லாவற்றின் சக்தியும் இதில் அடங்கியுள்ளது. தேவர்களுக்கு அசுரர்களால் ஆபத்து வரும்பொழுதெல்லாம் இவ்வாயுதம் அசுரர்களை ஒழித்துத் தேவர்களைக் காப்பதால் அவர்களின் வாழ்க்கை இதற்கு அடங்கியுள்ளது. இத்தகைய உன் சக்கராயுதம் உனக்கு உறைவிடமான திருவரங்கப் பெருநகரில் மறுபடி எப்பொழுதும் வைதிக தருமம் நிலைபெற்றிருக்குமாறு தானாகவே செய்தருள வேண்டும்.

Prayer to the Sudarshana Chakra

O Lord Ranganatha! The Sudarshana Chakra that You hold in Your right hand can destroy the bodies of the asuras who are enemies of Your devotees. Its radiance appears like the combined brilliance of fire, the moon, and the sun. This weapon not only removes outer darkness but also destroys the inner darkness of ignorance. Since all other weapons arise from it, it contains the power of them all. Whenever the devas are in danger from the asuras, this Chakra protects them by destroying their enemies, and thus their very existence depends on it. May this powerful Chakra, which belongs to You, ensure that Vedic dharma is firmly re-established and always flourishes again in the great city of Srirangam, Your divine abode.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸