श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
22- திருவாயுதங்களிடம் ப்ரார்த்தனை
- Prayer to Panchaayudham
திருவாயுதங்களிடம் ப்ரார்த்தனை
திருவரங்கப்பெருமானே! இப்பொழுது உலகில் பௌத்தர்களும் சார்வாகர்களும் தங்கள் மதங்களைப் பிரசாரம் செய்து வைதிக மதத்தை அழிக்கப் பார்க்கின்றனர். கலிபுருஷன் விடுத்த பணியாளரோ என்று கருதும்படியுள்ள துருக்கர் யவநர் முதலியோரும் வைதிக மதத்தினருக்குப் பல்வகையிலும் தீங்கு விளைவிக்க முற்பட்டுள்ளனர். இவர்களால் நாட்டுக்கு அச்சம் வளர்ந்துகொண்டே போகின்றது. உன் திருவாயுதங்கள் ஐந்தும் (திருவாழி - திருச்சங்கு - கதை - கத்தி - வில்) மிகுத்த சக்தியுடையன. அவை அந்தணர்களுக்குத் தீங்கு விளையாமல் காக்குமவை. அவ்வாயுதங்களைக்கொண்டு நாட்டுக்கு நேர்ந்துள்ள அச்சத்தைப் பலாத்காரத்தைக் கொண்டாவது உடனே போக்கியருள வேண்டும்.
Prayer to Panchaayudham
O Lord
Ranganatha! At present, in this world, groups like the Buddhists and Charvakas
are spreading their views and trying to weaken the Vedic dharma. Others, like
the Turushkas and Yavanas—who seem like agents of Kali—are also causing harm to
followers of the Vedic path in many ways. Because of this, fear is increasing
in the land. Your five divine weapons—the Sudarshana Chakra, Panchajanya Conch,
mace, sword, and bow—are filled with great power and are meant to protect the Brahmins.
Therefore, by using these weapons, please remove the fear and danger that have
come upon the land, even if it requires strong action, and protect dharma.